நெகிழவைக்கும் மனிதநேயம்.. வெள்ள நீரில் சிக்கி உயிருக்கு போராடிய நாய்… அதனை காப்பாற்ற இளைஞர் எடுத்த ரிஸ்க்கை பாருங்க…!
மனித நேயம் பற்றி படித்திருப்போம். ஆனால் அஃது இருக்கிறதா இல்லையா என்பது அப்பஅப்போ நடக்கும் சிறு நிகழ்வுகளின் மூலம் தான் தெரிகிறது. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனம் தான் பெரியது.
இவ்வாறு மனம் உள்ளவர்கள் நம் நாட்டில் இருப்பதால்தான், “நல்லார் ஒருவர் உளரேல் எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற ஒளவ்வையார் மூதுரை பழிக்கிறது.
இந்த நவீன உலகில் பிறருக்கு உதவி செய்தால் அதை பிறர் தவறாக நினைப்பார்களோ என்று கருதி பிறருக்கு உதவி செய்யாமலே இருந்து விடுகிறோம். ஆனால் இந்த இளைஞரோ எதையும் எதிர்பார்க்காமல் அவமானமாக கருதாமல் வாய் பேச முடியாத ஒரு உயிருக்கு உதவுகிறார்.
சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு மற்றும் வெளிமாநிலங்களைச் சார்ந்தவர்வளும் மழையினால் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். அப்போது அந்த அடை மழையின் காரணமாக அணையின் நீர் அதிகரித்திருந்தது. அந்த அணையின் நீரில் ஒரு நாய் உயிருக்கு போராடி தத்தளித்துக் கொண்டிருந்தது. அப்போது ஒரு இளைஞர் தன்னுடைய உயிரைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் உயிருக்கு போராடிய அந்த நாயை காப்பாற்றிய வீடியோவை பாருங்கள்.
இதைப்பார்த்தாவது மனித நேயம் வளருமா???