நடிகை பானுப்பிரியாவின் முன்னாள் கணவர் இவர்தானா.. பலரும் பார்த்திராத குடும்ப புகைப்படம்..!
பன்முக திறமைகள் கொண்ட பல நடிகைகளில் நடிகை பானுப்ரியா தனெக்கென தனி இடம் பிடித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்திரி அவர்களின் வாழ்கை வரலாற்று படத்தில் நடித்ததன் மூலம் நடிகை கீர்த்தி சுரேஷுக்கு பெயரும், புகழும், அதோடு தேசிய விருதும் கிடைதத்து. அதற்கு முக்கிய காரணமே கீர்த்தி சுரேஷுக்கு பின்னணி குரல் கொடுத்தது வேறு யாரும் அல்ல நடிகை பானுப்ரியா அவர்கள். இது பலருக்கும் தெரியாத செய்தி.
பரத நாட்டியம், குச்சிப்புடி என நடனத்தில் அசாத்திய திறமை வாய்ந்த பானுப்ரியா பல திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் தளபதி, உலக நாயகன் கமஹாசனுடன் மகராசன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் அவர்களுடன் ஆராரோ ஆரிராரோ…..படத்தில் நடித்ததில் தமிழ் திரையுலகில் அவருக்கென தனி இடம் கிடைத்தது. மேலும் கேப்டன் விஜயகாந்துடனும், சரத்குமார், சத்யராஜ்,பிரபு, கார்த்திக் போன்ற 80-களில் முன்னனியில் இருந்த பல கதாநாயர்களுடன் நடித்துள்ளார்.
நடிகை பானுப்ரியா 1967ஆண்டு,ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி மாவட்டத்தில் பிறந்துள்ளார். அவருக்கு இரண்டு வயதானதும் அவரது பெற்றோர்கள் சென்னக்கு குடிபெயர்ந்தனர். இவருக்கு கோபால கிருஷ்ணன் என்ற ஒரு அண்ணனும், சாந்தி பிரியா என்ற தங்கையும் உள்ளனர்.இவர் எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் ராமராஜனுடன் கதநாயகியாக நடித்திருக்கிறார். பானுப்ரியா அவர்களுக்கு பெற்றோர்கள்…… வைத்த பெயர் மங்காபானு. 1983-ல் மெல்ல பேசுங்கள் திரைப்படத்தில் மூலம் தமிழிலும், சித்தாரா என்ற தெலுங்கு திரைப்படத்திலும் அறிமுகம் ஆகியுள்ளார். ஆனால் இவருக்கு தமிழில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை ஆனால் தெலுங்கில் அவர் அறிமுகம் ஆன படம் சூப்பர்ஹிட் ஆனது. இதனால் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அமிதாப்பச்சன் மற்றும் அவருடைய மனைவி ஜெயாபச்சன் அவரின் நடன திறமையை கண்டு ஹிந்தியில் அறிமுகம் செய்தனர். பாலியுட்டில்மட்டுமே அவர் 15 திரைப்படங்களுக்கு மேலாக நடித்துள்ளார். 1989-ம் ஆண்டில் பாக்யராஜ் இயக்கத்தில் வெளிவந்த ஆராரோ ஆரிராரோ படத்தின் மூலம் தமிழ் திரையுலக வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அ
தன் பிறகு தமிழ் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருந்தார். அவருடைய வெற்றி படிக்கட்டுகள் 1995-ம் ஆண்டுவரை திரையுலகில் நீடித்தார். பின்னர் 1998-ல் கிராபிக்ஸ் பொறியியலாளர் ஆதர்ஷ் கௌஷல் என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் குடியேறினர். 2002-ல் அபிநயா என்ற மகள் இந்த தம்பதிக்கு பிறந்தது. அதன் பின்பும் அவருக்கு பட வாய்ப்புகள் வந்ததால் சென்னைக்கு வந்து தாயுடன் தாங்கினார். பின்னாட்களில் வேலை நிமித்தமாக சென்னையிலேயே நிரந்திரமாக தங்கினார். இதனால் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து கொண்டார் என்ற தவறான செய்தி உலா வந்தது.
ஜோதிகாவுடன் மகளிர் மட்டும் திரைப்படத்திலும், கடை குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்து ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். 2018-ல் கடை குட்டி சிங்கம் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது அவருடைய கணவர் தவறி விட்டார் என்ற செய்தி அமெரிக்காவில் இருந்து வந்திருந்ததை அறிந்து அழுது கொண்டிருந்தாராம். இதனால் அந்த படத்தில் வரும் காட்சிகளில் இவர் துயரில் கவலைப்பட்டு வந்ததால் இயல்பாகவே அவருக்கு சோகமாக வரும் காட்சிகளில் வருத்ததுடன் காணப்பட்டார்.
பல திறமைகள் சொந்தக்காரரான இவர் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது , தெலுங்கு மாநில திரைப்பட விருது , பிலிம்பேர் விருதுகள் வென்றுள்ளார். சன் தொலைக்காட்சியில் சக்தி தொடரில் நடித்ததற்காக வீடியோகான் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறார். சமீபத்தில் அவர் குழந்தை மற்றும் கணவனுடன் எடுத்து கொண்ட பழைய குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை இங்கே காணலாம்……