நடிகை சினேகாவின் அக்காவா இது? இவங்களும் பிரபலம் தான்.. தங்கையை போலவே அக்காவும் எவ்வளவு அழகு பாருங்க…!

புன்னகை அரசி சினேகா தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படத்தில் கவனம் செலுத்தவில்லை. கணவர், குழந்தை என தன் வாழ்வின் பெரும்பகுதியை குடும்பத்துக்காகவே ஒதுக்கினார். அவரது க்யூட்டான சிரிப்புதான் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.

கடந்த 2000வது ஆண்டில் வெளியான மாதவன் நடித்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான சினேகா, தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தார். இளைய தளபதி விஜயோடு வசீகரா, தல அஜித்தோடு ஜனா, கமலஹாசனோடு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என பல முண்ணனி நடிகர்களோடு நடித்தவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே கடந்த 2012ல் நடிகர், பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2015ல் விகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இப்போது இரண்டாவதாக சினேகாவுக்கு பெண்குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு ஆத்யந்தா என பெயர்வைத்துள்ளனர். இந்தப்பெயருக்கு ஆதியும், அந்தமும் அற்றவள் எனப்பொருள்.
இப்போது நடிகை சினேகா, தன் சொந்த அக்காவோடு இருக்கும் புகைப்படத்தை அவரது ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்துவருகின்றனர். இந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் அடடே சினேகாவின் அக்காவா இது? என கமெண்ட் செய்துவருகின்றனர்.