தேயிலைத் பறிக்கும் இடத்தில் ஒரு தேன் குரல்… பி.சுசீலா அம்மாவின் பாடல்களை அப்படியே பாடி அசத்தும் பெண்..!

theyilai_pen_song_nnz

பாடல்கள் மேல் நாட்டம் இல்லாதவர்கள் ஒரு சிலர் மட்டுமே இருக்க முடியும். அவரவர் ரசனைகளுக்கேற்ப பழைய பாடல்கள் முதல் புதிய பாடல்கள் வரை கேட்டு மகிழ்வதோடு விட்டு விடாமல் பாடியும் மகிழ்வார்கள். சிலர் தனிமையில் பாடுவதும் உண்டு. ஒரு சிலர் பாத்ரூம் சிங்கர்ஸ் போன்று குளியல் அறையில் பாடுபவர்களும் இருக்கிறர்கள். இயற்கையாகவே ஒரு சிலருடைய குரல்கள் மென்மையாகயும், கேட்பதற்கு இனிமையாக்கும் இருக்கும். அவர்கள் எந்த பாடலை பாடினாலும் மீண்டும் கேட்க தோன்றும்…. அப்படியே அச்சு அசலாக ராகத்தோடு படுவார்கள்.

தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் ரெஜினா லூகாஸ் தேயிலை பறிக்கும் போது சோர்வு தெரியாமல் இருப்பதற்காகவும் தான் கேட்டு மகிழ்ந்த பாடல்களை வேலை செய்யும் இடங்களில் ரசித்து பாடுவது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். உடன் பணிபுரியும் பெண்களும் வேலைப்பொழுதில் அலுப்பு தெரியாமல் இருப்பதற்காக இவரின் பாடல்களை கேட்டு மகிழ்கிறார்கள். விரும்பிய பாடல்களை பாடுவதோடு….. உடன் இருக்கும் பெண்களின் சோர்வை போக்க பி.சுசீலாவின் பாடல்களை தத்ரூபமாக பாடி அசத்துகிறார். இவரின் இந்த திறமையை அவரது கணவர் ரசிப்பதோடு விட்டு விடாமல் மேலும் ஊக்கப்படுத்துகிறார்.

இவரை போன்று திறமைகள் இருந்தும் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு திறமையை மேம்படுத்த முடியாமல் தன்னுளே புதைத்து கொண்டு குடும்பத்திற்காக இவரை போன்று உழைக்கும் மனிதர்கள் அதிகம். தற்போதுள்ள சமூக ஊடக வளர்ச்சியினால் பலரும் அவர்களது திறமைகளை சமூக ஊடகத்தின் உதவியுடன் வெளிப்படுத்தி பேரும் புகழையும் அடைந்து வருகின்றனர். இவரது திறமையை சமூக வலைதள வாசிகளும் கண்டு வியப்படைந்து வருகிறார்கள். ரெஜினா லூகாஸ் சூப்பர் சிங்கர்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையை உலகுக்கு வெளிப்படுத்தும் நாள் வெகு தொலைவில் இல்லை.

You may have missed