சொந்த ஊர் புகழ்பாடும் பாட்டு… நடனத்தில் பட்டையைக் கிளப்பிய பள்ளி மாணவிகள்..!

இந்தத் தலைமுறை மாணவிகள் சகல துறைகளிலும் கோலோச்சுகின்றனர். அதிலும் அவர்களிடம் அதிகளவில் நடனத் திறமை உள்ளது.
நடனம் என்றால் வெறுமனே சினிமா பாடலுக்கு ஆடுவது என்று நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இங்கே எட்டாம் கிளாஸ் மாணவிகள் சேர்ந்து நடனம் அதற்கும் மேல் என அசத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் எட்டாம் கிளாஸ் மாணவிகள் அதிகளவில் பங்கு பெற்றனர். இவர்கள் அந்த நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கும் ஆட முடிவு எடுத்தனர். அதற்காக சினிமா பாடலை கையில் எடுக்காமல் அவர்களே மெட்டுப் போட்டு, சொந்தமாக பாட்டு எழுதி ஆடி உள்ளனர்.

எங்க ஊரு திருப்பூரு… எங்க ஊரு திருப்பரு…என செம மாஸாக இந்த மாணவிகள் ஆடும் நடனம் அட போட வைக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்….