சிரித்த முகத்தோடு இருக்கும் இந்த சிறுவன் யார் தெரியுமா? இன்றும் மிகப் பிரபலமான நடிகர் தான்…!


சிரித்த முகத்தோடு பொடியன் ஒருவன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. காரணம் அந்தப் பொடியன் இன்று பலரும் அறிந்த பிரபல நடிகர். அவர் யார் எனத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படியுங்கள்.

தமிழ்த்திரையுலகில் சாக்லேட் ஸ்டார் என்றால் நடிகர் மாதவனைச் சொல்லலாம். காதல் சடுகுடு குடு..”என அலைபாயுதே படத்தில் அமுல்பேபியாக வருபவர் மாதவன். மீசை வைக்காத இவர் மீது அப்போது ஆசை வைத்தவர்கள் பலர். அதிகமான பெண் ரசிகர்களைப் பெற்றிருந்த மாதவன் செல்லமாக ‘மேடி” என அழைக்கப்பட்டார்.

இப்போது நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்துவருகிறார் மாதவன். அண்மையில் இவர் விஜய் சேதுபதியோடு சேர்ந்து நடித்த விக்ரம் வேதா, இறுதிச்சுற்று படங்கள் இவருக்கு நல்ல பெயர் எடுத்துக் கொடுத்தது. நடிகர் மாதவன் நடித்த ரன் திரைப்படம் இப்போது பார்த்தாலும் போர் அடிக்காமல் நகரும் கதைக்களம் கொண்டது.

ஒருபக்கம் அமுல்பேபி ரோல் செய்தாலும் இன்னொரு புறத்தில் அன்பே சிவம், தம்பி உள்ளிட்ட அழுத்தமான படங்களையும் செய்து இருக்கிறார் மாதவன். ஆரம்பத்தில் டிவியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிதான் இண்டஸ்ட்ரிக்கு வந்தார் மாதவன். நடிகர் மாதவனின் மகன் வேதாந்திற்கு இப்போது 16+ வயது ஆகிறது. நடிகர் மாதவன் இப்போது தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடித்து வருகிறார்.
இப்போது இணையத்தில் வைரலாகும் அந்தப் பொடியன் வேறு யாரும் இல்லை. நடிகர் மாதவன் தான் அது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்….
pic 1
