குறை ஒன்றும் இல்லை … திறமையால் மக்களின் மனதை வென்ற மாற்றுத்திறனாளி…..
குறைகள் இல்லாத மனிதர்கள் இல்லை….. அனைத்து மனிதர்களுக்குள்ளும் குறை என்பது இருக்கும். அதே போன்று திறமைகள் இல்லாத மனிதர்களும் இல்லை, ஏதாவது ஒரு திறமை அவர்களுக்குள்ளே இருக்கும். அறியாமையால் அவர்களுக்கு இருக்கும் திறமையை அறிந்து கொள்ளாமல் இருப்பார்கள்.
வைரமானது பட்டை தீட்ட பட்ட பிறகே மிளிர்கிறது. அது போல் மனிதர்களும் பல வித இன்னல்களையும், சவால்களையும் சந்தித்த பிறகே அவர்களும் திறமையால் முன்னேறுகின்றனர். சாதாரண மனிதர்களுக்கே சவால்களை எதிர் கொள்வது கடினமாக தெரியும். பல வித முயற்சிகள், கடின உழைப்பின் மூலமே அவர்கள் தங்களுடைய சிகரத்தை எட்ட முடியும்.
மாற்று திறனாளிகள் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே சிரமங்கள் எதிர்கொண்டு வருவார்கள். பிற மனிதர்களாலும், சமூகத்தாலும் புறக்கணிக்க படும் இவர்கள் தங்களுடைய திறமைகள் மூலம் உலக அளவில் கவனத்தை பெற்று வருகின்றனர். அந்த வகையில் நாம் இந்தியாவில் திறமையால் புகழ் பெற்ற மாற்று திறனாளிகள் பற்றி பார்க்க இருக்கிறோம், அவர்களில் நடிகை மற்றும் நடன கலைஞர் சுதா சந்திரன் தனது பதினாறு வயதில் விபத்தில் ஒரு காலை இழந்துள்ளார். அவர் இன்றும் தன்னுடைய திறமையினால் பல திரை படங்களிலும், சின்ன திரை நடன நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து திறமையால் வாழ்ந்து வருகிறார். ரவீந்திர ஜெயின் பிறப்பிலே பார்வையற்றவராக இருந்த போதும் இசையின் மீது கொண்ட ஆர்வத்தால் பாடல் பாட ஆரம்பித்து பின்நாளில் இசையமைப்பாளராக உயர்ந்தவர்.கிரிஷ் சர்மா ரெயில் விபத்தின் போது சிறுவயதில் ஒரு காலை இழந்தவர் வளர்ந்த பின்னர் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் பதக்கம் பெற்றார். H. ராமகிருஷ்ணன் 2 வயதானபோது போலியோவினால் இரு கால்களும் செயலிழந்தது. இதனால் மிகுந்த வேதனை சமூகத்தினரால் கொடுக்கப்பட்டது. தனது திறமையால் 40 ஆண்டு கால பத்திரிகை துறையில் பணியாற்றியவர் s.s மியூசிக்கல் தொலைக்கசிசேனலில் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார். மாற்று திறனாளிகளுக்காக கிருபா என்ற தொண்டு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். ப்ரீத்தி சீனிவாசன் இவர் 19 வயதிற்குட்பட்ட தமிழக கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தார். நீச்சல் அடிக்கும் போது எதிர்பாராத விதமாக நடந்த விபத்தில் கழுத்துக்கு கீழ் செயல்பாட்டை இழந்தார். சோல்ப்ரீ என்ற அமைப்பை உருவாக்கி மாற்று திறனாளி பெண்களுக்கு உத்வேகம் அளிப்பதோடு அவர்களின் திறனையும் வளர்த்து வருகிறார்.
இவ்வளவு ஏன் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு பதக்கங்கள் வென்ற தோடு இந்தியாவின் உயரிய விருதுகளான பதம ஸ்ரீ, அர்ஜுனா விருது, 2020-ல் மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதும் வழங்கப்பட்டது. இப்படி மாற்று திறனாளிகள் தங்கள் வாழ்க்கையில் போராடி வெற்றிகளையும், பதகங்களையும் பெற்று வருகிறார்கள். இங்கே ஒரு மாற்று திறனாளி கிரிக்கெட்டில் பொளலிங்க் செய்வதை பார்த்து இணையமே ஆச்சார்யமடைந்துள்ளது. காணொலியை இங்கே காணலாம்…….
निरंतर अभ्यास और इच्छाशक्ति से कोई भी व्यक्ति अपनी किसी भी 'अक्षमता' को आश्चर्यजनक 'क्षमता' में बदल सकता है…!
— Sanjay Kumar, Dy. Collector (@dc_sanjay_jas) October 25, 2022
💕#प्रेरक pic.twitter.com/o5i797FNxA