காந்தக்குரலில், புன்னகை பூத்த முகத்துடன்… சக்கை போடு போடும் கிராமிய பாடல் பாடி அசத்திய தேவகோட்டை அபிராமி..!

அரிசி குத்தும் கிழவி …..அபி அக்கா தான் எங்க தலைவி என மாஸ்ஸாக சமூக ஊடகபிரியர்கள் கொண்டாடும் கிராமிய பாடகி தேவகோட்டையை சேர்ந்த அபிராமி. இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் இந்த தலைமுறை இளைஞர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.தேவகோட்டை அபிராமிக்கு சினிமாவில் பாடும் பாடகர்களுக்கு இணையாக இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவருடைய தனி சிறப்பு மென்மையான குரலில் பாடலுக்கு ஏற்ப முக பாவனைகளுடன் சிரித்த முகத்தோடு பாடுவதை கேட்கும் போதும், அவருடைய பாடல்களை காண்பவருக்கும் உற்சாகம் ஏற்படுவதோடு பாடல் வரிகளும் புதுமையாக தோன்றும்.

இவர் நீயா…. நானாவிலும் பங்கேற்று தனது புகழை நிலைநாட்டியுள்ளார். கிராமிய பாடல்களை பாடுவதோடு, கானா பாடல்களையும் பாடி அசத்தி வருகிறார்.

சமூக வலைத்தளவாசி ஒருவர் ஒரு சில பாடகர்கள் பாடல்களை பாடும் போது தமது முகத்தில் பிரசவ வலியை ஏற்படுத்துகின்றனர் என்றும் ரசனையோடு பாடுவதற்கு பதிலாக முகத்தில் வலியை தெரிவிக்கும் முக பாவனைகளை தெரிவிக்கின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். கிராமிய பாடல்களை பாடும் தேவகோட்டை அபிராமி பாடுவதை கேட்பதற்கு மட்டும் அல்லாமல் பார்ப்பதற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் விதமாக புன்னகை புரிந்தவாறே பாடுவது அவரது தனி சிறப்பு. ஒரு கோடி பார்வையாளர்களை கடந்த தமிழ் மணம் கமழும் தேவகோட்டை ஏஞ்சல் பாடிய பாடல் இதோ……