என்னது நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டருக்கு இவ்ளோ பெரிய பசங்களா… வெளியான அழகிய குடும்ப புகைப்படம்..!


தமிழ் சினிமா உலகில் மிகவும் பிரபலமான நடன இயக்குனராக இருப்பவர் தான் பிருந்தா. இவர் பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். ஒரு படத்தில் நடிப்புக்கு எவ்ளோ முக்கியத்துவம் உண்டோ அதே அளவிற்கு நடனத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

தற்போது வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் இவர்தான் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். வெந்து தணிந்தது காடு என்ற சிம்பு நடித்த படத்திலும் பிருந்தா தான் மல்லி பூ பாடலுக்கு நடனத்தை இயக்கிருக்கிறார். இவருடைய அக்கா கலாவும் ஒரு புகழ் பெற்ற நடன களை இயக்குனராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவரே ஹே சினாமிகா என்ற படத்தை இயக்கியும் இருக்கிறார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வந்தது.
நடன இயக்குனர் பிருந்தாவிற்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தற்போது விடுமுறையில் சுற்றுலா சென்றுள்ள இவர் தனது கணவர் மற்றும் மகன்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன் முதலாக தன்னுடைய இணைய பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த இணைய வாசிகள் மிகவும் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
pic1

pic2
