உரிமையாளரிடம் செம பாசம் காட்டும் காளை மாடு… இந்த அன்பிற்கு ஈடு இணையே இல்ல.. பாருங்க உருகிடுவீங்க..!


மாடுகளை வீட்டின் பின்வாசலில் கட்டி வைக்கும் விவசாயிகள் பலரையும் பார்த்திருப்போம். ‘’ஆடு, மாடு மேல உள்ள பாசம் வீட்டு ரேசன்கார்டில் பேரை சேர்க்க கேட்கும்” என சிவாஜி திரைப்படத்தின் பல்லேலக்கா பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாடும் பாடலைப் போலவே மாடுகளின் மீது அதீத அன்பை செலுத்துவோரும் உண்டு. பதிலுக்கு அந்த மாடுகளும் அவர்கள் மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும்.

பொதுவாகவே வீட்டில் பசு மாடு இருப்பது அதிர்ஷ்டம் என சொல்வார்கள். அதனால் தான் பசுவை கோமாதா எனச் சொல்கிறோம். பசு மாடு மிகவும் பாசமாக பழகக் கூடியதும்கூட. மனிதர்களோடு நெருக்கமாக இருக்கும் பிராணிகளில் முதன்மையானது மாடு. டீ, காபி என எதைக் குடித்தாலும் அதற்கு மூலப்பொருளான பாலைக் கொடுப்பதால் பசு நமக்கு அன்னமிடும் விலங்கும் கூட. சரி இங்கே விசயத்துக்கு வருவோம்.

மாடுகள் தங்கள் எஜமானார்களோடு மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும் பழகக் கூடியது. அந்தவகையில் இதோ இங்கே சில எஜமார்களிடம் மிக, மிக நெருக்கமாக ஒரு பச்சிளம் குழந்தையைப் போல மாடு துள்ளிவிளையாடுவதைப் பாருங்கள். இதோ அந்த காட்சி உங்களுக்காக…