உணர்ச்சிவசப்பட்டு தன் மகளுக்காக பேசிய பிக் பாஸ் தனலெக்ஷ்மியின் அம்மா…. இயல்பாகவே அவள் அப்படித்தான்… உங்கள் வீட்டில் உள்ளவர் போன்று கருதுங்கள்…


பிக் பாஸ் பரபரப்பிற்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஜி.பி.முத்து வருகையால் உற்சாகத்தோடு பிக் பாஸ் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அவர் வெளியேறியதும் சற்று கவலை கொண்டனர். ஆனாலும் அவர் தனது குழந்தைகளின் மேல் உள்ள அன்பினால் தான் வெளியே சென்றுள்ளார் என்பதை புரிந்து கொண்டு அவருடைய முடிவை ஏற்று கொண்டனர்.

ஜி.பி.முத்து வெளியேறிய பிறகு, சாந்தி மாஸ்டர், அசல் கோளாறு,ஷெரினா மற்றும் மகேஸ்வரி மக்களால் வெளியேற்றப்பட்டனர். தற்போது கடந்த வாரம் தனலெட்சுமி தன்னுடைய அணிக்கான பணத்தை பதுக்கி வைத்து கொண்டதால் குறும்படத்தின் மூலம் ஆண்டவரால் சரியாக கவனிக்கப்பட்டார். சரியான புரிதல் இல்லாத காரணத்தினால் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்பது சமூக வலைத்தளத்தினரின் கருத்தாகவும் இருக்கிறது. இன்னும் சில வலைதள வாசிகள் முதல் குறும்படம் மூலம் தணலெக்ஷ்மிக்கு நற்பெயரும், தற்போது அவர் செய்த தவறால் இரண்டாம் குறும்படத்தின் மூலம் எதிர்மறையான எண்ணங்களினாலும் வலைதளவாசிகளால் விமர்ச்சிக்கப்படுகிறார். கோபத்தையும், மனப்பாங்கையும் சரி செய்து விளையாட்டில் கவனமுடன் விளையாடினால் இன்னும் சில வாரங்கள் வீட்டில் இருக்க மக்களால் அனுமதிக்கபடுவார் என்பது பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது..
மிச்சர் டீம் தற்போது எலிமினேஷனில் வந்தால் மக்கள் அவர்களை வெளியே தள்ள காத்து கொண்டிருக்கிறார்கள். அபாயகரமான லிஸ்டில் தற்போது ரக்க்ஷிதா, அமுதவாணன், குயின்சி, நிவா, கதிர், ராபர்ட்,ஜனனி,ராம் போன்றவர்கள் மக்கள் மனதில் இருந்து தங்கள் இடத்தினை இழந்து வருவது அவர்கள் பங்கெடுக்கும் விளையாட்டிலும், குணநலனிலும் தெளிவாக தெரிகிறது.

அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும்……அதிகமா கோபப்படுற பொண்ணும்….. நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை…… என்பதை மெய்ப்பிக்கும் விதத்தில் தனலெக்ஷ்மி கோபத்தில் நடந்து கொள்வது பார்வையாளர்களை வெறுப்படைய செய்துள்ளது. கோபம் கொள்வதை தவிர்த்தால் மக்கள் மனதில் அவருக்கு நிச்சயம் இடம் கிடைக்கும்.
தனலெட்சுமி என்ற சுகி வீட்டில் செல்லமாக அழைக்கப்படும் பெயர் அவரின் தாய் யூ -டியூபில் தனது மகளின் கோப மனப்பான்மையையும் அவர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த சிரமங்களையும், இன்னல்களையும் விவரித்ததோடு தனலெக்ஷ்மியின் குணநலன்கள் பற்றியும் விவரித்துள்ளார். அந்த காணொலியை கீழே கண்டு ரசிக்கலாம்..