இறைச்சிக்கு பதிலாக பயன்படுத்தும் மீல் மேக்கர் உடலுக்கு நல்லதா..? கெட்டதா..? எதிலிருந்து வருகின்றது என்று தெரியாமலே சாப்பிடுகின்றோம்..!

இறைச்சி இல்லாமல் பலருக்கும் ஒருநாள் சாப்பாட்டைக் கடத்துவதும் பெரிய துயரமான விசயம் தான். மீன், கோழி, ஆடு, நண்டு, இறால் என அசைவ உணவுகளும் வரிசை கட்டும். என்னதான் நாம் அசைவ பிரியர்களாக இருந்தாலும் செவ்வாய், வெள்ளி, புரட்டாசி மாதம், சபரிமலை சீசன் என அவ்வப்போது அசைவ உணவின் ஆசைக்கு வேட்டுவைத்துவிடும். அதற்கு மாற்றாகத்தான் மீல் மேக்கர் கைகொடுக்கும்.

சோயா பீன்ஸ் எண்ணெய் தயாரிக்கும்போது, பிழிந்து எடுக்கப்பட்ட பின்னர் கிடைக்கும் சக்கைதான் மீல் மேக்கராக உருமாறுகிறது. இது மிகுந்த புரதச்சத்து மிக்க உணவாகும். இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை திருமண விருந்துகளில் பணக்கார உணவாக பார்க்கப்பட்ட மீல் மேக்கர் இன்று உள்ளூர் பெட்டிக்கடைகளில் கூட கிடைக்கிறது. இது இறைச்சிக்கு இணையாக சுவையாக இருந்தாலும், அந்த சத்து இருக்குமா என பலரும் சந்தேகிக்கின்றனர்

நிச்சயம் இருக்கும். தானியவகையில் சோயா பீன்ஸில்தான் அதிக புரதச்சத்து உள்ளது, மீல் மேக்கர் என்பது அதை தயாரித்த நிறுவனத்தின் பெயர். அதனால் உலகளவில் இந்த பெயரே நிலைபெற்ருவிட்டது. மீல் மேக்கர் உடலுக்கு நல்லதுதான். ஆனால் அதையே அளவுக்கு மீறி எடுத்துக்கொண்டால் ஆண்களுக்கு விந்தணு சுரப்பில் பிரச்னை ஏற்படலாம். அதனால் உணவே மருந்து என்னும் முன்னோர் கொள்கைப்படி, மீல் மேக்கரையும் அளவோடு சாப்பிடுவோம்.