இது லஞ்ச பணம் இல்லை பாட்டி வாங்கிக்கோங்க.. நெகிழவைத்த போலீஸ்… உருகவைத்த பாட்டி.. காரணம் தெரியுமா..?

  நேர்மை என்றாலே என்ன எனக் கேட்கும் காலச்சூழலுக்குள் நாம் போய்விட்டோம். இன்றெல்லாம் யாரும், எதிலும் நேர்மையாக நடப்பதே இல்லை. நேர்மையான மனிதர்களும் இன்று மிக, மிக அரிதாகி வருகிறார்கள். 

    என்னதான் பணக்காரர்களாக இருந்தாலும் எங்கிருந்தாவது பணம் கிடைத்தால் ஒகே என்னும் மனநிலையில் தான் பலரும் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு பாட்டியின் நேர்மை அனைவரையும் சிலிர்க்க வைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் ஒரு பாட்டி தினமும் கொய்யாப்பழம் விற்று வருவார். அந்த பேருந்து நிலையத்தில் ஒரு ஆசாமி முழு போதையில் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் அருகே ஒரு மஞ்சள் பை இருந்தது. 

   அதில் என்ன இருக்கிறது என்றுகூட அந்தப் பாட்டி பார்க்கவில்லை. பாவம், யாரு பெத்த பிள்ளையோ இப்படி விழுந்து, போதையில் சரிந்து கிடக்குதே என தானே ஒரு டீ வாங்கிக் கொடுத்திருக்கிறார். அப்போதும் அவருக்கு விழிப்பு வரவில்லை சுய நினைவு இன்றி புலம்பியவாறே இருந்தார். உடனே, பாட்டி உன் வீட்டு அட்ரஸ் சொல்லு. நானே கூட கொண்டு விட்டுவிடுகிறேன் எனச் சொல்ல அவருக்கு அதுவும் சொல்லத் தெரியவில்லை. உடனே பாட்டி அந்த மஞ்சள் பையை எடுத்துக்கொண்டுபோய் திருப்பத்தூர் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்தனர்.

   அவர்கள் அதை திறந்து பார்த்தபோது, அதில் மூன்று லட்ச ரூபாய் ரொக்கப் பணம், செல்போன் ஆகியவையும் இருந்தது. உடனே, போலீஸார்  பாட்டியை பார்த்து பையில் எவ்வளவு பணம் இருக்கு பார்த்தீங்களா? எனக் கேட்டார். உடனே பாட்டி நான் பையைத் திறக்கவே இல்லை எனச் சொன்னார். பாட்டியின் நேர்மையைப் பாராட்டி போலீஸார், அவருக்கு பரிசுத்தொகை கொடுத்தனர். அப்போதும் பாட்டி அதையும் வாங்கவில்லை. உடனே அந்த போலீஸ்காரரிடம் என் மகனுக்கு இதை வாங்குனா பிடிக்காது எனச் சொன்னார். உடனே போலீஸ்காரர், உங்கள் மகனுக்கு போன் போட்டுத்தாங்க நானே பேசுகிறேன் எனச் சொல்லி பரிசை வாங்க சம்மதிக்க வைத்தார்.

   ஆனாலும் பாட்டி தயக்கம் காட்டவே, இது லஞ்சப் பணம் இல்ல பாட்டி…வாங்கிக்கோங்க! என சொல்லி உருகவைக்கிறார் இன்ஸ்பெக்டர். கடைசியில் இத்தனை பிரயித்தனங்களுக்குப் பின்பே பரிசுத்தொகையை பெற்றுக்கொள்கிறார் பாட்டி. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 

You may have missed