இதுக்கு மேல என்னங்க பாசம்… அக்காவின் பிரிவை தங்க இயலாது கதறி அழுத தம்பி.. காண்போரை கலங்க செய்யும் நிகழ்வு..!

பெற்றோர்கள் தங்கள் மகளுக்கு திருமணம் ஆனதும் மறுவீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது அழுவார்கள். ஆனால் உடன்பிறப்புகள்……ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வளர்ந்து, சண்டைகள் அதிகமாக போட்டு அழுது அம்மாவிடம் சொல்லி அழ வைத்தவருக்கு அடி வாங்கி கொடுத்து அதில் சந்தோசப்பட்டு, பிறகு மனம் கேளாமல் அவருக்கு சமாதானம் சொல்லி இணை பிரியா சண்டை கோழிகள் போல் இருக்கும் ஒரு உறவு தான் அக்கா-தம்பி உறவு.

எவ்வளவு தான் வீட்டுக்குள் சண்டை போட்டாலும் வெளியே ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுப்பதில்லை. எல்லா பாசத்தையும் உள்ளே வைத்துக் கொண்டு பாசமே இல்லாதது போல் வெளி வேஷம் போட்டு ஒருவருக்கு ஒருவர் மேல் அதிகம் பாசம் வைத்து மனதுள்ளே இருக்கும்…….

இதெல்லாம் அவளுக்கு திருமணம் ஆன பிறகு மறுவீட்டுக்கு செல்லும் போதுதான் வெளிவரும்…..இதையெல்லாம் நினைத்து கண்களில் கண்ணீர் துளிக்கும். அந்த உணர்வுக்கும் அந்த நிமிடத்திற்கும் ஏன் நாம் அழுகிறோம்??? இவ்ளோ பாசம் எங்கே இருந்து வந்தது??? நன்றாக வளர்ந்து விட்டோமே….இனிமேல் சண்டைகள் போட முடியாதே எண்ணங்களும் சேர்ந்து நமது மனம் கலங்கும்… அப்படிப்பட்ட பாசத்தை தான் இந்த வீடியோவில் நாம் பார்க்க போகிறோம்.