முருகப் பெருமான் பாடலுக்கு உற்சாகமாக தோகைவிரித்தாடும் மயில்… இதைப் பார்க்கவே புண்ணியம் செஞ்சுருக்கணும்…!

     மயிலை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தோகை விரித்து மயில் ஆடுவதைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருக்கும். அதிலும் மழை நேரங்களில் மயில் தோகை விரித்து ஆடுவதே மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்.

  இந்தியாவின் தேசிய பறவையாகவும் மயிலே இருக்கிறது. பொதுவாகவே நாம் பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் தான் உரியது என நினைத்துக் கொள்கிறோம். மயில் மழை வரும் முன்பே அதைத் தன் அழகுத் தோகையை விரித்து வரவேற்கத் தொடங்கிவிடும். மயில் இந்தியாவின் தேசிய பறவை மட்டுமல்ல, நம் தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் வாகனமும் கூட! முருகன்  கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு அதிகளவில் மயில்களைப் பார்க்கலாம். அந்தவகையில் இங்கே ஒரு முருகன் கோயிலில் மயில் செய்த செயல் பெரும் கவனம் குவித்துள்ளது.

                 தர்மபுரி மாவட்டத்தில் உள்ளது நடுப்பட்டி கிராமம். இங்கு கந்தன் முருகன் கோவில் ஒன்று உள்ளது. இங்கு முருகப் பக்தர் ஒருவர் முருகனை நினைத்து மனம் உருகப்பாட, உடனே தன் தோகையை விரித்து மயில் ஆட்டம் போடுகிறது. பொதுவாகவே மனித நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் மயில்கள் ஆட்களைக் கண்டால் ஓடிவிடும். ஆனால் இங்கு முருகப் பக்தரின் பாடலைக் கேட்டு, மயில் ஆடிய காட்சிகள் பக்தர்களை உருகவைத்துள்ளது. இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.