மாட்டின் கொம்பில் கொண்டை வைத்த மானிடர்கள்… புற்களை தீயாய் மேய்ந்த மாடு…..இணையத்தில் தீயாய் பரவும் காட்சிகள்..!

artist_mei_vid

மனிதர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகளை அக்கறையோடும்….அன்போடும்…. பராமரித்து வருவார்கள். நோய்தாக்குதலுக்கு  உள்ளான விலங்குகளுக்கு சிகிச்சை அளித்து தகுந்த மருத்துவம் பார்ப்பார்கள். செல்ல பிராணிகளான நாய்,பூனை , பசு,ஆடு, கோழி, கிளிகள், மைனாக்கள் போன்ற வாயில்லா ஜீவன்களுக்கு உணவு கொடுத்து பராமரிப்பார்கள்.

ஆடு,மாடு போன்ற விலங்குகளை மேய்ச்சலுக்காக காலி விளை நிலங்களிலும், புற்கள் நிறைந்த பகுதிகளில் மேய விடுவார்கள். அப்படி அந்த விலங்குகள் மேயும் போது அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். தற்போது மழைக்காலம் தொடர்வதால் கால்நடைகளை மேய்ச்சசலுக்கு அழைத்து செல்ல முடியாத சூழ்நிலையில் சிலர் புது வித யுக்திகளை கையாண்டு வருகிறார்கள்.

சமீபத்தில் கூட தஞ்சாவூர் மாவட்டம் , ஒரத்தநாடு ,குலமங்கலம் கிராமத்தை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் ஆடுகளுக்கு ரெயின் கோட் அணிவித்து மேய்ச்சலுக்கு அனுப்பினார். இதன் மூலம் அந்த கால்நடைகளை மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம். அந்த சம்பவம் வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வந்தது. மேலும் இவர் மாடு, மற்றும் கோழிகளை வளர்த்து வருகிறார். ஆடுகள் மழையில் நனைந்து நடுங்குவதை கண்டு சங்கடம் கொண்டவர் அவற்றை குளிரில் இருந்து காப்பதற்காக அரிசி சாக்கினை ரெயின் கோட் போன்று தைத்து அதை அணிவித்துள்ளார். இதன் மூலம் அவை மேய்ச்சலுக்கு சென்று வந்து பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இங்கேயும் ஒருவர் தாம் வளர்த்து வந்த மாட்டிற்கு தலையில் ஹெட் லைட் மாட்டி இரவில் மேய்ச்சலுக்கு விட்டிருக்கிறார். அந்த மாடும் இது தான் வாய்த்தது சமயம் தீயாய் வேலை செய்யணும் குமாரு என்று அரக்க பரக்க மேய்ந்து கொண்டிருக்கும் காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அந்த காணொலியை கீழே காணலாம்…….

You may have missed