பீஸ்ட் பட புகழ் ‘சதீஷின்’ குடும்பமா இது? அடடே மனைவி இந்த பிரபலமா?

  இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் இல்லாத தெருவே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம்.இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமான விஜய்….இப்போது விஜயின் அப்பா என தன்னை அறிமுகப்படுத்தும் அளவுக்கு புகழின் உச்சத்தில் இருக்கிறார்.

      நடிகர் விஜய் தனது ரசிகையான சங்கீதா என்பவரைத் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு பிள்ளைகள். இதில் விஜயின் மகளான திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் பேட்மிட்டன் வீராங்கணையாவார். இப்போது அவரது மகன் வெளிநாட்டில் படிக்கிறார். தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் அடித்தது. இப்போது ஓடிடியிலும் அந்தப் படம் வெளியாகி உள்ளது.

  பீஸ்ட் படத்தில் நடிகர் சதீஸ் கிருஷ்ணனும் நடித்திருந்தார். இவர் கலைஞர் டிவியின் மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த அமோக வரவேற்பால் உன்னாலே…உன்னாலே என்னும் படத்தில் ஹீரோ வினயின் நண்பராக நடிக்கும் சான்ஸ் கிடைத்தது. வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா, தலைவா, அச்சம் என்பது மடமையடா, பரத் நடித்த 555 உள்பட பல படங்களிலும் நடித்துள்ளார். நடன இயக்குனரான இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பான டேன்ஸ் நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்தார்.

   அண்மையில் பீஸ்ட் படத்தில் இவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. இவர் சுவாதி என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்தவர்.இந்தத் தம்பதிக்கு ஒர்ய் மகனும் உண்டு. இணையத்தில் முதன் முதலாக சதீஸ் கிருஷ்ணன் தன் குடும்பப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

You may have missed