பிக் பாஸ் 6 ஜனனியா இது… புடவையில் ஜொலிக்கும் அழகோ அழகு… ட்ரெண்டிங்கில் இருக்கும் புகைப்படங்கள்…!

ஜனனி குணசீலன் இவர் பிரபல தொகுப்பாளினி, டிக் டாக் பிரபலம் மற்றும் உணவு பகுப்பாய்வாளர் என பல திறமைகளை மீடியாவில் நிரூபித்துள்ளார். தற்போது பிக் பாஸ்-6 இல் போட்டியாளராக பங்கேற்று அவரின் திறமைகளை வெளிக்காட்டி வருகிறார்.

ஜனனி குணசீலன் பிக் பாஸில் பங்கேற்ற பிறகு இவரை லாசிலியாவின் தங்கை போன்று இருப்பதாகவும், சாய் பல்லவி போன்ற முக தோற்றம் கொண்டவராகவும் இருப்பதாகவும் சமூக வலைதளவாசிகள் புகழ்ந்து வருகின்றனர். இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பு IBC – என்ற ஸ்ரீ லங்கா மீடியாவில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டிக்-டாக் பிரபலமாகவும் விளங்குகிறார். இவர் டிக்-டாக் வீடியோக்கள் பதிவிட்டது அதிக பட்சமாக 2- மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இவர் இலங்கையில் உள்ள பாரம்பரிய உணவுகளை பகுப்பாய்ந்து பல கடல் வாழ் உணவினை சமைப்பது பற்றி பல வீடியோக்கள் வெளியிட்டுள்ளார். இவர் உருட்டு என்ற யூ-டியூப் சேனலில் பல கான்சப்டுகளை மையப்படுத்தி இரு வேறு கருத்துக்களை தொகுப்பாளருடன் காமெடியாக கதைத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பல ரசிகர்களை பெறுள்ளார்.

ஜனனி 22 வயதே ஆனவர்,யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்பதால் அவருடைய தமிழ் கொஞ்சும் தமிழாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமென்ட் செய்து வருகின்றனர். தற்போது சின்னத்திரையில் அடி எடுத்து வைத்திருக்கும் ஜனனியை பிக் பாஸில் தனி திறமையை நிலை நாட்டுவார் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அவருடைய புகை படங்கள் சமீபத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

pic1

pic2