படத்தில் மட்டும் அல்ல நிஜத்திலும் வானதைப்போல மனம் கொண்டவர் கேப்டன் விஜயகாந்த்… பிரபல கிரிக்கெட் வீரரின் ரசிகரா… இணையத்தில் வெளியான யாரும் பார்த்திராத புகைப்படம்..!

captain_pic_with_cricketer

கேப்டன் என்ற பெயரை கேட்டதும் நமக்கு நியாபகம் வருவது புரட்சி கலைஞர் விஜயகாந்த். சினிமாவில் இவரை கேப்டன் என்று அழைப்பதற்கு காரணம் அவரது 100-வது படமான கேப்டன் பிரபாகரன் என்ற தலைப்பில் வந்த சூப்பர் ஹிட் படமாகும். அதன் பிறகு மக்களும் சினி உலகமும் அவரை அன்போடு கேப்டன் என்று இன்றும் அழைத்து வருகின்றனர்.

நடிகர் விஜயகாந்த் அவர்கள் மதுரை, திருமங்கலத்தில் அழகர்சாமி, ஆண்டாள் அழகர் சாமி அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழு பெயர் நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி. சினிமாவில் வில்லனாக அறிமுகம் ஆன இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திர சேகர் இயக்கத்தில் சட்டம் ஒரு இருட்டறை என்ற திரைப்படத்தில் கதாநாயகன் ஆனார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது, அதை தொடர்ந்து திரை துறையில் அவருக்கான வெற்றி கோட்டையை கட்டிக்கொண்டிருந்தார். 80மற்றும் 90 களில் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசனுக்கு போட்டியாக இருந்துள்ளார்.

சிங்கம், கேப்டன், நல்ல தலைவர்,வள்ளல், நேர்மை, துணிச்சல், கருப்பு எம்.ஜி.ஆர், மனிதாபிமானம் உள்ள நல்ல இதயம் கொண்ட மனிதர் என்று சினிமா வட்டாரங்களிலும், மக்கள் மனதிலும் நிலை பெற்றுள்ளார்.

தமிழர்களின் பண்பான விருந்தோம்பலுக்கு எடுத்துக்காட்டாகவே விளங்கியுள்ளார் என்றால் அது அவரின் நற்பண்புகளை காட்டுகிறது. அவரது படங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் மட்டும் அல்லது ஷூட்டிங்கில் பணி புரியும் அனைவரையும் ஒரே மாதிரியாக நடத்துவதுவதோடு அவர் அனைவர்க்கும் ஒரே மாதிரியான உணவை பரிமாறுவார் என்று அவரிடம் பணிபுரிந்தவர்கள் கூறியுள்ளனர். தலைவாசல் விஜய், நடிகர் தியாகு, சத்யராஜ், சரத்குமார் ,மன்சூர் அலிகான் , அஜய் ரத்தினம், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, இயக்குனர் அருண் பாண்டியன் போன்ற இன்னும் பல திரை பிரபலங்கள் அவருடைய தாயுள்ளத்தை பெருமையாக விவரித்துள்ளனர். இவருடைய குணத்திற்கு திரையுலகினர் அனைவருமே ரசிகர்களாக உள்ளனர்.

திரை உலகையே ரசிகராக கொண்ட கேப்டன் விஜயகாந்த் கிரிக்கெட் ரசிகராக வெஸ்ட் இன்ட்டிஸ் வீரர் லாரா உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது…

pic

You may have missed