சிறு வயதில் இப்படி ஒரு திறமையா..? இந்த சிறுவன் என்ன அழகாக தவில் வாசிக்கிறார் பாருங்க….

thavil_siruvan_vid_nzz

இன்றைய சிறுவர்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் ஒரு சின்ன பொடியன் தன் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் தன்னைப் பார்த்து திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும் சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும். அதேபோலத்தான் கோயில் விழாக்களுக்கும் முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். அவர்கள் அடிக்கும் மேளத்தில் தான் திருவிழாக்களின் சுவாரஸ்யமே இருக்கிறது.

கொட்டு அதிலும் தவிலுக்கு மயங்காதவர்களே யாரும் இருக்கமாட்டார்கள். பொதுவாக கொட்டு அடிப்பதும் கூட கடினமான உடல் உழைப்புதான். கொட்டு அடித்து அடித்து சிலருக்கு விரல்கள் காய்ச்சுப் போய் இருக்கும். இங்கே பெரிய ஆண்களுக்கு இணையாக மேளக் கொட்டு அடித்து சிறுவன் ஒருவர் அசத்துகிறார். ஆண்களுக்கு இணையாகவும், சில நேரங்களில் அவர்களையே மிஞ்சும்படியும் அந்த பொடியன் தவில்ு அடிப்பது அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.

You may have missed