சந்திரமுகி படத்தில் வரும் சிறுமியா இது… தற்போது குடும்பத்துடன் வெளியான அழகிய புகைப்படம்…

chnthra-mugi-child-nzz-pic

சந்திரமுகி படத்தில் இடம் பெற்ற அத்திந்தோம்…..திந்தியும்….தோம்தன என்ற பாடல் வரிகளின் முடிவில் பொம்மி என்று முடியும். இந்த பாடலை சூப்பர்ஸ்டார் அவர்கள் படத்தில் இடம்பெற்ற குழந்தை நட்சத்திரமான பிரகர்ஷித்தாவிற்கு எடுத்துரைப்பது போல் இருக்கும். பொம்மிக்கு பாடுவது போல் நயன்தாராவிற்கு அறிவுரை கூறுவார். பிரகர்ஷிதாவை பொம்மி என்றால் மட்டுமே தெரியும் அவரின் நிஜ பெயரை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த குழந்தை நட்சத்திரம் 90-ஸ் கிட்ஸ்களின் விருப்பமான சீரியல்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறார்.

90-ஸ் காலங்களில் குழந்தைகளுக்கு பிடித்தமான வேலவன், ராஜா ராஜேஸ்வரி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் சந்திரமுகி, சரவணா போன்ற பெரிய திரையிலும் நடித்து புகழ் பெற்றுள்ளார்.

நடித்து கொண்டே கல்வியை தொடர்ந்து வந்துள்ளார். இவரை முதன் முதலில் சந்திரமுகி திரைப்படத்தில் நடிக்க தேர்வு செய்தது இயக்குனர் பி.வாசு அவர்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் நடிக்கும் போது தொடக்க கல்வி பயின்று வந்ததாகவும், படத்தில் நடித்த அனைவரும் முக்கியமாக சூப்பர் ஸ்டார், நடிகர் பிரபு அவர்கள் அன்பாக பழகியதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவருடைய குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அவருடைய புகை படங்கள் வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. நம்ம பொம்மி எவ்வளோ வளர்ந்துட்டாங்க……என்று வியப்பில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்….

pic1

pic2

You may have missed