சந்திரமுகி படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையா இவர்…? எவ்வளவு மார்டார்னா இருகாங்க.. புகைப்படம் பார்த்து வியந்த ரசிகர்கள்..!

santhramugi_sornam_charc

என்ன தான் ஐம்பது, அறுபது படங்களில் நடித்தாலும் சிலர் மக்கள் மத்தியில் ரீச் ஆகவே மாட்டார்கள். ஆனால் சிலரோ ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அவர்களுக்கு அந்தப்படம் ரொம்பவும் நல்லபெயரை எடுத்துக் கொடுத்துவிடுவதுண்டு

அந்தவகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளைய திலகம் பிரபு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் சந்திரமுகி. மணிசித்திரதாழ் என்னும் மலையாளப் படம் தான் இதன் மூலக்கதை. இந்தப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் காமெடி வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். மாப்பு…வைச்சுட்டாண்டா ஆப்பு என இந்தப் படத்தில் வடிவேலு சொல்லுவது இன்னும் கூட பேமஸ் தான். இந்தப்படத்தில் வைகைப்புயல் வடிவேலுவின் மனைவியாக சொர்ணம் என்னும் கதாபாத்திரத்தில் நடித்தவரை நினைவில் இருக்கிறதா?

இந்தப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, சொர்ணத்தை கரெக்ட் செய்ய முயற்சிப்பதாக நினைத்துக்கொண்டு பீதியிலேயே இருப்பார் வடிவேலு. இந்தப்படத்தில் நடித்த வடிவேலுவின் மனைவி சொர்ணத்தின் நிஜப்பெயரும் சொர்ணம் தான். இவர் பருத்திவீரன் புகழ் சரவணனுக்கு ஜோடியாக தாய் மனசு என்னும் படம் மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தமிழில் பெரியதம்பி, கோகுலத்தில் சீதை படங்களிலும் நடித்தவர் ஹீரோயின் மார்க்கெட் போனதும் கிடைத்த பாத்திரங்களில் நடித்து வந்தார்.

மாயா மச்சீந்திரா, சதுரங்கம் உள்ளிட்ட சில் சீரியல்களிலும் நடித்துள்ளார். திருமணம் முடிந்து செட்டிலாகிவிட்ட சொர்ணம் இப்போது ஜம்மென உடம்பை குறைத்து, பழைய பார்முக்கு வந்ததோடு மாடர்ன் உடையில் ஒரு புகைப்படமும் வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சந்திரமுகி சொர்ணமா இது என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.

pic 1

pic2

You may have missed