கையில் இந்த மாதிரி ரேகை இருந்தால் நீங்களும் அதிர்ஷ்டசாலிதான்… உங்களுக்கு இருக்கான்னு செக் பண்ணுங்க..!

regai_athirshtam_jotum

கொடுக்குற தெய்வம் கூரையை பிய்ச்சுட்டு கொடுக்கும் எனச் சொல்லுவார்கள். அது நிஜத்திலேயே நடந்தால் எப்படி இருக்கும்? இவை அப்படியே உண்மையா எனத் தெரியாவிட்டாலும் மனிதர்கள் வாழ்வில் பின்னால் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்வதில் ரேகைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன.

அதனால் தான் பழைய காலத்தில் எல்லாம் ஜாதகத்தைவிட கைரேகைகளையே பெரிதும் பார்க்கும் பழக்கம் இருந்தது. பொதுவாகவே கைரேகைகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கையில் உள்ள நான்கு முக்கிய ரேகைகளைத் தவிர சிலருக்கு நடுவிரல், மோதிரலுக்கு அடியில் வளைந்த நிலையில் ஒரு ரேகை போகும். இது ஒரு வட்ட வளையத்தை உருவாக்கும். இதை சுக்கிர வளையம் அல்லது காதல் பெல்ட் எனச் சொல்வார்கள். இது அனைவருக்கும் இருக்காது. காதலில் யாருக்கெல்லாம் பிரச்னை இருக்குமோ அவர்களுக்கு இருக்கும். இந்த வளையம் இருப்பவர்களுக்கு காதலில் பிரச்னை இருக்கும்.

இதேபோல் சுண்டுவிரலின் கீழே ஆரம்பாகி, நடுவிரல் அல்லது ஆள்காட்டி விரலை நோக்கி ஒரு ரேகை செல்லும். இதை இதய ரேகை எனச் சொல்வார்கள். இங்கே படத்தில் இருப்பது போல் இதயரேகை நடுவிரலின் மேலே செல்வது போல் இருந்தால் யாரையும் சார்ந்து வாழ விரும்பாதவர்களாக இருப்பார்கள். இவர்கள் புத்திக்கூர்மையுடன், லட்சியத்தில் உறுதியுடனும் இருப்பார்கள். முடிவு எடுத்தால் அதில் தெளிவோடும் இருப்பார்கள்.

2 வது விசயம் என்னவென்றால் சிலருக்கு இதயரேகை இந்த 2வது படத்தில் காட்டியபடி நடுவிரல் மற்றும் ஆட்காட்டி விரலுக்கு இடையே போனால் அவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார்கள். அதே நேரம் அவர்கள் அதிக கருணையுள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

3வது படத்தில் இருப்பதுபோல் இதயரேகை ஆட்காட்டி விரலின் மேலே ஏறினால் இவர்கள் எந்த சூழலிலும் மனம் தளராதவர்களாக இருப்பார்கள். மகிழ்ச்சி இவர்களிடம் எப்போதும் இருக்கும். அதேபோல் இவர்கள் மனம் தளராமல் எந்த சூழலையும் எதிர்கொள்வார்கள்.

4வது படத்தில் இருப்பதுபோல் இதயரேகை கொண்டவர்க பொறுமையும், சக மனிதர்கள் மீது அக்கறையும் கொண்டவர்கள். அமைதியான சுபாவமும், ரொம்ப நல்லவர்களாகவும் இருக்கும் இவர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டும்.

You may have missed