கூட வர அடம்பிடித்த செல்ல பிராணி… வந்த வழிய பார்த்து போ என அதட்டிய எஜமானர்… கெஞ்சி கூத்தாடி இறுதியில் என்ன நடந்ததென நீங்களே பாருங்க…!

dog-owner-cute-fight-for-lift

குழந்தைகள் உள்ள வீட்டினில் பெரியவர்கள் யாரேனும் வெளியே சென்றால் உடன் வருவேன் என்று அடம் பிடித்து அழுவார்கள். அவர்களை சமதானப்படுத்தி வெளியேறுவதற்குள் ஒரு வழி ஆகிவிடுவார்கள் பெரியவர்கள். நானும் வருவேன் என்று கூறுவதோடு மட்டும் இல்லாமல் கார், பைக் என வாகனங்களில் ஏறி அமர்ந்து கொண்டு கீழே இறங்க மறுப்பார்கள். சரி என்று அவர்களை ஒரு ரவுண்டாவது வெளியே அழைத்து சென்று வந்து இறக்கிவிட வேண்டும். இல்லை என்றால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து அக்கம்….. பக்கத்தினரையும்…..என்னாச்சு ஏதாச்சு…….என்று விசாரணை நடக்கும் அளவிற்கு கொண்டு வந்து விட்டு விடுவார்கள். வீட்டில் குழந்தைகள் தான் கூட வருவேன் என்று அடம்பிக்கும் என்றால் இங்கே வீட்டு செல்ல பிராணிகள் அதற்கும் மேலே சென்று அனுமதி கொடுக்காவிட்டாலும் கூடவே தொடர்ந்து வருகிறார்கள்.

வீட்டில் உட்கார் உடனே வருவேன் என்று சொன்னாலும் புரியாது. எஜமானர்கள் எங்கே சென்றாலும் பின் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பார்கள். சமீபத்தில் கூட ஒருவர் வேலைக்கும் செல்லும் போது வீட்டில் வளர்த்த மூன்று நாய்கள் அவர் பயணம் செய்த பேருந்தை தொடர்ந்து சென்று வருகிறது. தினமும் மூன்று நாய்களும் அவரின் பேருந்தை பின்தொடர்ந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

இங்கேயும் ஒருவர் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணித்து கொண்டு வர அவரை தொடர்ந்து அவரது செல்ல பிராணியும் பின் வருகிறது. இதனை பார்த்த அந்த நபர் நீ வீட்டிற்கு போ….என்று கூற அவர் சொல்வதை சட்டை செய்யாமல் அவரது வாகனத்தில் ஏறி அமர்ந்து கொள்கிறது. அந்த நபருக்கும் செல்ல பிராணிக்கும் உள்ள உரையாடல் சமூக வலைதளவாசிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதோ அந்த காணொலி……

You may have missed