கலியுகத்தில் ஆண்களின் திருமண வயது இதுதான்.. இதற்கு முன்போ, பின்போ நடந்தால் பெரிய ஆபத்து…

kaliyuga_anin_marriage

காலம் கலிகாலம் ஆகிப்போச்சுடா என அமர்க்களம் படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போடும் ஆட்டத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்கமுடியாது. இப்போது நடந்து கொண்டிருக்கும் காலத்தை தான் கலிகாலம் என்கிறார்கள். பெரியவர்கள் கூட யாரையாவது கோபித்துக்கொள்ளவோ, திட்டவோ வேண்டுமென்றால் கலிகாலம் ஆகிவிட்டது எனச் சொல்வதைக் கேட்டிருக்கிறோம்.

இந்த இடட்தில் கலி என்பதன் அர்த்தம் தெரிய வேண்டியது அவசியம். கலி என்றால் சனி பகவான், அதாவது, சனியின் பிடியில் தான் இப்போது உலகம் இருக்கிறது. பொதுவாகவே சட்டப்படி, எந்த ஒரு பெண்ணும் 18 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்ய முடியும். அதற்குக் கீழ் நடக்கும் திருமணங்கள் குழந்தை திருமணமாகப் பாவித்து தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். கலியுலகத்தில் பெண்ணுக்கு 23 வயதுக்குள் திருமணம் செய்துவிட வேண்டும்.

ஆண்களைப் பொறுத்தவரை பெண் கிடைக்காமல் பலரும் அல்லாடும் காட்சி தொடர்கதையாகி வருகிறது. கலியுலகக் கணக்குப்படி ஆணுக்கு 23, 22 வயதிலேயே திருமணம் செய்ய வேண்டுமாம். அந்த வயதில் தான் ஆணின் கிரகத்தின் ஆளுமை அதிகம் இருக்கும். அதிலும் சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கையுடன் கூடிய காலம் ஒருவருக்கு 20 முதல் 24 வயதுக்குள் வருவதால் பொதுவாகவே ஒரு மனிதனுக்கு பாலியியல் கிளர்ச்சி ஏற்படும். இதனால் அந்த வயதில் திருமணம் செய்து வைக்காவிட்டால் ஒருவர் பாதை மாறிவிடும் அபாயமும் இருக்கிறது.

ஆனால் இதைக் கேள்விபட்ட ஆண்களின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. இங்கே 90ஸ்கிட்ஸே இன்னும் பெண் கிடைக்காமல் தவியாய் தவித்துவரும் நிலையில், 23 வயதுக்குள் ஆணுக்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும் என்பதெல்லாம் கஷ்டமான விசயம் தானே மக்களே? என்ன செய்ய கலிகாலம் அப்படியிருக்கிறது!

You may have missed