ஓடும் பேருந்தில் ஒலித்த எம்.ஜி.ஆர் பாடல்… தன்னை மறந்து ஆனந்தமாய் டேன்ஸ் ஆடிய பாட்டி..!

pattai_dance_bus_magilchi

என்னதான் வயதானாலும் ஒருவருடைய குழந்தை தனம் எப்போதும் மாறாது என்பதற்கு இந்த வீடியோ ஒரு உதாரணம்.

சின்ன குழந்தைகள் தான் எப்போதும் ஏதாவது விளையாட்டு தனமாக செய்வார்கள் என்று சொல்லுவார்கள். ஆனால் அதை எல்லாம் தாண்டி வயதானவர்களுக்கும் குழந்தை மனது உண்டு என்று யாரும் நினைப்பதில்லை. வயதானாலே ஆசைகள் அதிகமாக இருக்காது. அவர்களுக்கு என்று ஒரு தனி பட்ட கனவுகள் கிடையாது என்று தான் எல்லாரும் எண்ணுகிறார்கள்.

அந்த காலத்தில் உள்ள பாட்டிமார்கள் எப்போதும் அறிவுரை மட்டுமே கூறுபவர்களாகவே இருந்தார்கள். இந்த காலத்தில் உள்ள பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளுடன் ஆனந்தமாய் இருந்து கொண்டு வீடியோவகை காட்சிகளையும் சேர்ந்து செய்கிறார்கள்.

என்ன இருந்தாலும் அவர்கள் இந்த காலத்து குழந்தைகளுக்கு ஏற்ப மாறி விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

பேருந்தில் நின்று கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார் ஒரு பாட்டி. அந்த பேருந்தில் ஒலித்த பாடலை கேட்டு கொண்டு ஆனந்தமாய் ஆடும் காட்சி பார்ப்பவர்களை ரசிக்கத் தான் வைக்கிறது.

You may have missed