இதுவரை உலக நாயகனுடன் நடித்திராத ஒரே வில்லன் நடிகர்…. தற்போதும் சினிமாவில் கலக்கி கொண்டிருக்கும் அந்த நடிகர் யார் தெரியுமா..?


2019-ல் திரைத்துறையில் 60 ஆண்டுகள் நிறைவு செய்து, தற்போதும் திரைத்துறையில் தன்னுடைய விடாமுயற்சியால் முன்னிலை நடிகர்களுள் ஒருவராக இருப்பவர்தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவர் குழந்தை நட்சத்திரமாய் அறிமுகமாகி தனது முதல் படத்திலேயே ஜனாதிபதி விருதைப் பெற்றார். மேலும், இவர் கதாநாயகனாக கன்னியாகுமரி என்ற மலையாள படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் தான் நடித்த படங்களின் மூலம் நிறைய விருதுகளை வாங்கிக் குவித்துள்ளார். தசாவதாரம் படத்தில் பத்து வேடத்தில் நடித்துள்ளார். தற்போது இவர் நடித்த விக்ரம் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வசூலை அள்ளியது.

மன்சூர் அலிகான் என்பவர் நம் அனைவருக்கும் தெரிந்தவர். இவர் படத்தில் ஹீரோக்களுக்கு வில்லனாகவும், துணைக் கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இவரின் கேப்டன் பிரபாகரன் திரைப்படம் இவருக்கு ஒரு திருப்பு முனையாகவே அமைந்தது. இவர் பல முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.

ஆனால் கமல்ஹாசனுடன் ஒரு தடவைக் கூட நடித்தது இல்லை. இவர் நடனமாடிய ஒரு பாடல் விக்ரம் படத்தில் இடம்பெற்று இருப்பதால் இவருக்கு கமலுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
