ஆண்கள் கும்மி பாட்டு பாட… இந்த கிராமத்து திருவிழாவில் தாவணியில் இளம் பெண்கள் போட்ட அழகிய ஸ்டெப்பை பாருங்க…!

kirma_nigalchI_dance_nzz

கிராமிய கலைகளுக்கு எப்போதும் தனி வரவேற்பு இருக்கும். தமிழர்களுக்கென்று ஒரு பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கிறது. பண்டிகை காலங்கள் மற்றும் ஊர் திருவிழாக்களில் பெண்கள் கிராமிய பாடலை புனைந்து கும்மியடித்து நடனம் ஆடுவது வழக்கமான ஒன்றாகும். நாளடைவில் நாகரிக மாற்றத்தால் கிராமிய கலைகள் வெகுவாக குறைந்து போனது.

தற்போது கிராமிய கலைகளை ஊக்குவிக்கவும் அதை காப்பாற்றவும் சில தொழில் முறை வல்லுனர்கள் ஆர்வம் உள்ள மாணவ மாணவிகளுக்கு இலவசமாக கற்று தருகின்றனர். இந்த தலைமுறை ஆண்கள் மற்றும் பெண்களும் கிராமிய பாடல் மற்றும் நடனத்தை கற்று அதை அரங்கேற்றம் செய்வதை பார்ப்பதற்கு….. நம் தலைமுறைகள் என்றும் தமிழ் கலாச்சார பாரம்பரியத்தின் மீது வைத்திருக்கும் நன் மதிப்பை காட்டுகிறது.

பொட்டு வண்டி கட்டி வாறேன்….. என்ற கிராமிய பாடலுக்கு பெண்கள் மற்றும் ஆண்கள் நடனம் ஆடுவது கண்களுக்கு விருந்தாகவும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த பாடலில் இடம்பெற்றுள்ள வரிகள் பெண்கள் திருமணத்திற்கு பிறகு கடைபிடிக்க வேண்டிய பணிகளில் இருந்து சுதந்திரம் கொடுத்து பெண் தான் விரும்பிய வாழ்க்கையை தரவிருக்கும் ஆண் அதை பாடுவதாக இடம்பெற்றுள்ளது.

You may have missed