இது மனசு இல்லைங்க… சுத்தத் தங்கம்..!உச்சி வெயிலில் சாலையில் வேலை செய்த துப்புரவு பணியாளர்… விமானி செய்த தரமான சம்பவம்…

     சிலர் சின்ன பொறுப்புக்கு வந்தால்கூட தங்களுக்கு உயர்வான இடம் கிடைத்துவிட்டதாக பந்தா காட்டுவார்கள். ஆனால் சிலரோ, தாங்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் எளிய மக்களுக்கும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வார்கள். இதுவும் அப்படியான ஒரு சம்பவம் தான்!

  சின்ன வயதில் பலருக்கும் பைலட் ஆகவேண்டும் என்ற கனவு இருக்கும். ஹெலிகாப்டரோ, விமானமோ பறக்கும்போது எத்தனை வயது ஆனாலும் குழந்தையைப் போல் நாம் ஆச்சர்யத்துடன் வானத்தை நோக்கிப் பார்ப்போம். அந்தவகையில் விமான எப்போதுமே நமக்கு ஆச்சர்யம் ஆனதுதான்! 

  அந்தவகையில் இங்கேயும் ஒருவர் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். மிகவும் தாழ்வான உயரத்தில் அது பறந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப்பகுதியில் ஒரு முதியவர் ஒருவர் துப்புரவுப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். அவர் கீழே கிடந்த குப்பைகளை, இலை சருகுகளைத் தூக்கித் தள்ளிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த ஹெலிகாப்டரை ஓட்டிவந்த பைலட் அவருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மிகவும் தாழ்வாகப் பறந்தார். ஹெலிகாப்டரின் மேலே சுற்றும் இறக்கையின் காற்றில் குப்பைகள் எல்லாம் ஒரே இடத்தில் சேர்ந்து விடுகிறது.

   இதைப் பார்த்த அந்த துப்புரவுப் பணிசெய்யும் பெரியவர் உடனே தன் இருகைகளையும் தூக்கி வணங்கினார். உண்மையிலேயே இந்த பைலட் சுத்தத் தங்கம் தான். இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்றுவரும் இவர்குறித்து இதோ இந்தப் பதிவில் பாருங்கள். வீடியோ இதோ…