மடலிங்கில் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் குஷ்புவின் மகள்… நீல நிற குழலில் அசத்தும் மாடர்ன் மங்கை…!

kushboo_daughter_coloring_pic

90-ஸ் களில் அனைவருக்கும் பிடித்த நடிகையாக குஷ்பூ வலம் வந்தார். அவருக்காக ரசிகர்கள் கோயில் கட்டிய கதைகளும் உண்டு. அவர் நடித்த சின்ன தம்பி திரைப்படம் பார்ப்பதற்கு இப்போதும் ரசிகர்கள் விரும்புவார்கள். பிறகு இயக்குனர் சுந்தர்.சி யை திருமணம் செய்து கொண்டு இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார். மானாட மயிலாட டான்ஸ் நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து கருத்துக்கள் கூறி பங்குபெற்றவர்களை ஊக்கப்படுத்துவார்.தற்போது அவர் அரசியல், சினிமா, குடும்பம் என்று செட்டில் ஆகி விட்ட நிலையில் தன்னுடைய உடல் எடையை குறைத்து தற்போதுள்ள நடிகைகளுக்கு போட்டியாக வலம் வருகிறார். அவரின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகும்..

அவருடைய மகள்களும் உடல் எடையை குறைத்து அவர்களது புகைப்படங்களை சமூக ஊடங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிறு வயதில் சற்று பருமனான தோற்றத்தில் இருந்தவர்கள் ஆளே அடையாளம் தெரியாமல் உடல் மெலிந்து ட்ரென்டிங் ஆகியுள்ளனர். அவருடைய மூத்த மகள் அவந்திகா இளைய மகள் ஆனந்திகா. இவர்கள் கொரனா லாக் டவ்னின் போது யூ-டூப் சானல் ஒன்றை ஆரம்பித்து தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் தாங்கள் உடல் எடை குறைத்த அனுபவங்கள் பற்றியும் தெரிவித்துள்ளார்கள். மூத்த மகளான அவந்திகா அமைதியான குணம் உடையவர் என்றும், இளையவரான ஆனந்திகா வீட்டில் கலகலப்பாக பேசும் இயல்புடையவர் என்று பேட்டிகளில் தெரிவித்துள்ளார். இப்போது குஷ்புவின் பெரிய மகளான அவந்திகா தலை முடியை நீல நிறத்தில் கலரிங்க் செய்து படு மாடெனாக மாற்றியுள்ளார்.தனது புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது வைரலாக பரவி வருகிறது.

You may have missed