குட்டிக் குழந்தையோடு கொஞ்சி விளையாடும் பூனை… மடியில் படுத்ததும் என்னென்ன செய்யுது பாருங்க..!

 பொதுவாக செல்லப்பிராணிகள் வளர்ப்பில் பலரும் நாய் வளர்ப்புக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்த இடத்தை  பூனைகள் பிடிக்கின்றன. வீட்டில் வளர்க்கப்படும் பூனைகளும் பிள்ளைபோல் வளர்ந்துவிடுவதுதான் இதற்குக் காரணம்.

பூனைகள் மற்ற விலங்குகளைவிட கூடுதலாக நேசம் காட்டுவதோடு, வீட்டுக்குத் தேவையான உதவிகளையும் செய்கிறது. இங்கே ஒரு பூனையின் செயல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்படி அந்த பூனை என்ன செய்தது எனக் கேட்கிறீர்களா?

  ஒருவீட்டில் மிகுந்த பாசத்தோடு பூனையை வளர்த்துவந்தனர். அந்த வீட்டில் இருக்கும் குழந்தையிடம் பூனை மிகவும் செல்லமாக விளையாடவும் செய்வது வழக்கம். தவழும் குட்டிக்குழந்தையோடு சேர்ந்து அந்த பூனை போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை என சொல்லிவிடலாம். இங்கே அந்தப் பூனை படுத்திருக்க, அதன் மேல் அந்த குட்டிக்குழந்தை தலைவைக்கிறது. 

உடனே பூனை அந்தக் குழந்தையின் தலையில் முத்தம் கொடுப்பது போல் செய்கிறது குழந்தைக்கு இது மிகவும் பிடித்துவிட, மீண்டும், மீண்டும் பூனையின் மடியில் தலைவைக்கிறது. பூனையும், ஒவ்வொருமுறையும் எழுந்து முத்தம் கொடுக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.