எம்மாடி… ஆத்தாடி… பட பாடகி மகதியை தெரியுமா..? அவருக்கு இவ்வளோ பெரிய மகனா.. இணையத்தில் வெளியான புகைப்படம்..!
2003-இல் சாமி திரைப்படத்தில் இடம் பெற்ற அய்யைய்யோ….. அய்யைய்யோ….. பிடிச்சிருக்கு என்ற பாடல் இவரை திரை துறையில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இவர் திரை துறையில் அடி எடுத்து வைத்தார் அவர் தான் பின்னணி பாடகி மஹதி. இவரை இந்த பாடல் அண்ணாமலை ரஜினியை போல் ஒரே பாடலில் பெரிய பணக்காரனாக ஓஹோ….. என்ற நிலைக்கு வந்ததை போன்று….. இவரும் இந்த பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் அறிமுகபடுத்தியது. அதே மாதிரி குயிலே குயிலே…கோவில் திரைப்பட பாடல் காதலிக்கும் ஆசையில்லை என்ற செல்லம் திரைப்பட பாடல் நெஞ்சே நெஞ்சே …அயன் திரைப்பட பாடல் அண்ணாமலை பட ரேஞ்க்கு கொண்டு சேர்த்தது. பிறகு இவர் பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. பெரும்பாலும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் அனைத்து பாடல்களும் மக்களிட்ம் இவருக்கு தனி பெயரையும் புகழையும் பெற்று தந்தது. இசையமைப்பாளர் இளையராஜாவின் தீவிர ரசிகையாக இவர் முதன் முதலாக அவருடைய இசையிலும் பாடியுள்ளார். சில பல காரணிகளால் அந்த படம் கைவிடப்பட்டது.
இவரது குடும்பம் பழமையான இசை குடும்பத்தை சேர்ந்தவர்கள். சிறுவயதில் இருந்தே இசையின் மீது நாட்டமும்… பாடுவதிலும்…. திறமை பெற்று சிறந்து விளக்கியுள்ளார். இவரது தந்தை திருவையாறு சேகர் மற்றும் தாய் புல்லாங்குழல் இசை மேதை வசந்தி சேகர், இதனால் இயற்கையாகவே இசைத்திறமை பெற்றுள்ளார். இவர் தூர்தர்சனில் நடைபெற்ற இசையின் வினாடி -வினா மற்றும் ஆஹா பாடல் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
2008-ல் டாக்டர் கே.ஸ்ரீ குமாரை திருமணம் செய்து கொண்டார்.இவருக்கு சமர்த் என்ற மகனும் உள்ளார். அவரின் தற்போதைய புகை படங்களை கண்டு களிக்கலாம்.
pic1
pic2