3 நாளில் 100 கோடி மேல் வசூல் செய்த சூர்யாவின் கங்குவா… தயாரிப்பாளர் பெருமிதத்துடன் வெளியிட்ட பதிவு…

1997ல் நேருக்கு நேர் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சாந்தமாகவும் பொறுமையான குணங்களில் நடித்து வந்துகொண்டிருந்த சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக புது முகத்தை மக்களுக்கு காட்டியது என்றால் காக்க காக்க படம் தான். இவர் இப்படத்தில் நடித்த தனது சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவரின் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த்ய நவம்பர் 14 ஆம் தேதி இவரின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் கங்குவா திரைப்படம் வெளிவந்து முதல் நாளிலே உலகளவில் 50 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. முதல் நாளிலே இவ்வளவு வசூல் என்றால் இனிவரும் நாள்கள் இதையே தொடரும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால் படம் வெளியான அடுத்த நாளில் இருந்தே நெகட்டிவ் விமர்சனகள் பல பெற்றுக்கொண்டேதான் இருந்தது. இதனால் படத்தின் வசூல் பாதிக்கப்பட்ட நிலையில் வேணுமென்றே படத்திற்கு நெகட்டிவ் விமர்சன செய்கிறார்கள் என்று அவரது மனைவியும் மற்றும் நடிகையுமான ஜோதிகா அவர்கள் இன்ஸ்ட்டாவில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் கங்குவா படம் 3 நாளிலே 127.64 கோடி வாசொல் செய்தது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக போஸ்டர் வெளியிட்டுள்ளது.
