கங்குவா படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்… ஒரு முதலை சீனிற்க்கு இவ்வளவு வேலையா..!! வியந்த ரசிகர்கள்…

1997ல் நேருக்கு நேர் படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சாந்தமாகவும் பொறுமையான குணங்களில் நடித்து வந்துகொண்டிருந்த சூர்யாவிற்கு ஒரு திருப்புமுனையாக புது முகத்தை மக்களுக்கு காட்டியது என்றால் காக்க காக்க படம் தான். இவர் இப்படத்தில் நடித்த தனது சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளிவந்த ஜெய் பீம் படம் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில் கடந்த நவம்பர் 14 ஆம் தேதி இவரின் நடிப்பில் சிறுத்தை சிவா அவர்களின் இயக்கத்தில் கங்குவா திரைப்படம் வெளிவந்து. முதல் நாளிலே உலகளவில் 50 கோடி மேல் வசூல் செய்து சாதனை படைத்ததால் இனிவரும் நாள்கள் இதையே தொடரும் என அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.இந்நிலையில் படம் பல எதிர் விமர்சனங்களை பெற்று வந்தது.

இதைத்தொடர்ந்து தியேட்டர் உரிமையாளருக்கு தயாரிப்பாளர் சில கட்டளைகள் போட்டார்.இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியீட்டு உள்ளனர்.இதை பார்த்த ரசிகர்கள் ஒரு முதலை வரும் சீனிற்க்கு இவ்வளவு உழைப்பு போட்டுருக்காங்களா கண்டிப்பாக படக்குழுவினருக்கு சல்யுட் அடிக்கணும்னு கமெண்ட் செய்து வருகின்றனர்.

You may have missed