மஞ்சள் வீரன் படத்திலிருந்து தூக்கியெறியப்பட்ட TTF வாசன்…. எனக்கு பணம் கூட வேண்டாம், என்னக்கு இத மட்டும் சொல்லுங்க.. வருத்தத்தில் TTF வாசன்….

யூடீயூபில் பைக் ஓட்டி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பிடித்து பிரபலமானவர் தான் TTF வாசன். இவர் தற்போது செல் அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கப்போவதாக தகவல் மற்றும் புகைப்படங்கள் வெளியானது.

இடையில் தான் படப்பிடிப்பிற்கு பூஜை எல்லாம் தடபுடலா போட்டு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது செல் அம் அவர்கள் TTF வாசனை படத்தில் இருந்து நீக்கியதாக மீடியாவில் சொல்லிருந்தார். இதனை பார்த்த TTF வாசன் யூடூபில் என்னை படத்தில் இருந்து நீக்குவது பற்றி இதற்கு முன் எனக்கு அறிவிக்கவில்லை எனவும், நான் இதை மீடியா பார்த்து தான் தெரிந்து கொண்டேன் எனவும் கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்புக்கு நான் சரியாக ஒத்துழைக்கவில்லை என என் மீது குற்ற சாற்று வைத்துள்ளனர் ஆனால் படப்பிடிப்பிற்கு வெறும் போட்டோ ஷூட் மட்டுமே நடந்தது. அதையும் தாண்டி பூஜைக்கு நானே செலவு செய்தேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பெரிய தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார் அவரை வைத்தே படம் எடுக்க போறேன் என்று என்னிடம் சொல்லிருந்தால் நானே சரி அண்ணா என்று கூறி பூஜை செலவு பணம் கூட திரும்ப கேட்டிருக்கமாட்டேன் என கூறியுள்ளார்.

ஆனால் நான் அவருக்கு போன் செய்தும் அதை எடுக்காமல் மீடியா முன் சொன்னது எனக்கு மிகவும் வருத்தமாகவுள்ளது என தெரிவித்துள்ளார். இப்போது கூட எனக்கு பணம் வேண்டாம் காரணம் மட்டுமே தெரிந்தால் போதும் என கூறியுள்ளார். மேலும் இப்படத்தின் இயக்குனர் செல் அம் திருவிக பூங்கா படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்த