96 புகழ் ஜூனியர் ஜானுவா இது..? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

தமிழ்த்திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக சிலபடங்கள் மட்டுமே மனதில் தங்கும். அதிலும் தமிழ் திரையுலகைப் பொறுத்தவரை சமீபகாலமாக மாஸ் சினிமா படங்களே அதிகளவில் வெளியாகிவருகிறது. அதேநேரம் காலத்தால் அழிக்க முடியாத காவியமாக சமகாலத்தில் ரசிகர்கள் மனதில் ‘96’ திரைப்படம் இடம்பிடித்தது.

இதில் விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் பள்ளிப்பருவ விஜய்சேதுபதியாக நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கர் நடித்திருந்தார். இதேபோல் பள்ளிப்பருவ த்ரிஷாவாக தெலுங்கு திரைப்பட நடிகை வீணா கிஷனின் மகள் கெளரி கிஷன் நடித்தார். விஜய் சேதுபதி_த்ரிஷா ஜோடியையும் ஓவர்டேக் செய்து, இந்த ஜோடிதான் படத்தில் ரசிகர்கள் மனதில் நின்றது.

96 பெரும் வெற்றிபெற்றாலும் கெளரி கிஷன் அதன்பின் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இந்நிலையில் கெளரியின் சமீபத்திய புகைப்படம் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. அதைப்பார்ப்பவர்கள் அடடே நம்ம ஜானுவா இது? என ஆச்சர்யத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
pic1

pic2

pic3
