நீ படித்த ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டெர்டா…. என்று சிலம்பம் சுற்றிய சிங்க பெண்…. சுற்றுற வேகத்துல சூறாவளியே வந்துரும்போலேயே…

silambam_sutrum_pen_nzz

சிலம்பம் நம் தமிழ் பாரம்பரிய கலைகளில் ஓன்று. சிலம்பாட்டம் தமிழர்களின் தொன்று தொட்டு வரும் கிராமிய கலைகளின் வழி வருவதாகும். சிலப்பதிகாரம் போன்ற சங்க இலக்கியங்களில் சிலம்பம் பற்றிய குறிப்புகள் காண கிடக்கின்றன. இதனை தோற்றுவித்தவர் அகத்திய முனிவர் என்ற வாய்மொழி பேச்சுகளும் உண்டு.

ஆங்கிலேயர்களை எதிர்க்க வீர பாண்டியன், மருது சகோதரர்கள் சிலம்பாட்ட வீரர்கள் மூலம் எதிர்த்தாக வரலாறு பதிவுகள் உள்ளன. சிலம்பம் கற்பதற்கு 5 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் கற்கலாம். தற்கால தலைமுறையினர் சிலம்பத்தை ஆர்வமுடன் கற்று வருகின்றனர். இது இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டாகும், சிலம்பம் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இளைஞர்கள் தங்கள் உடலை கட்டு கோப்பாக வைப்பதற்கு சிலம்பம் கற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மதுரை மாவட்டம் சிலம்பாட்டத்தில் சிறந்து விளங்குகிறது. நம் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் மதுரை மாடக்குளம் ரவியிடம் இந்த தற்காப்பு கலையை பயின்றுள்ளார். அவர் சிலம்பம் சுற்றும் அநேக தமிழ் படங்களை காணலாம்.

சிலம்பம் சுற்றுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் இது இருதயதிற்கு மிக சிறந்த கார்டியோ பயிற்சியாக இருக்கிறது.இரத்த ஓட்டத்தை சீராக வைப்பதுடன் உடலில் உள்ள கலோரிகளை எரிக்கிறது. நினைவாற்றலை மேம்படுத்துகிறது, உடலை சுறு சுறுசுறுப்பாக வைப்பதுடன் நல்ல மனவலிமையை தருகிறது,உடலில் நெகிழ்வுத்தன்மையை ஏற்படுத்துகிறது. கை தசைகள் வலுவாக வைக்கிறது, போதை பழக்கங்களான புகை பிடித்த, மது அருந்துதலில் இருந்து விடுவிக்கிறது.

இங்கே ஒரு சிங்க பெண் சூறாவளி போன்று சிலம்பம் சுற்றுவதை பார்த்து இணையமே அதிர்ந்துள்ளது…..அந்த சூறாவளி புயலை இங்கே காணொலியில் காணலாம்…..

You may have missed